சாத் பூஜையொட்டி ரசாயன நுரையில் நீராடிய பக்தர்கள்
சூரிய பகவானுக்கு நன்றி சொல்லும் விழாவான சாத் பூஜையை கொண்டாடும் வடமாநில மக்கள், டெல்லியில் உள்ள யமுனை நதிக்கரைக்கு சென்று ரசாயனம் நுரை பொங்கிய நீரில் நீராடி உள்ளனர்.
சாத் பூஜை, வட மாநிலங்களில் பெரிய அளவில் கொண்டாடப்படும் விழாவாகும். இந்த விழாவில் சூரிய பகவானுக்கு நன்றி சொல்வதற்காக நடத்தப்படும். 4 நாட்கள் தொடர்ந்து இந்த விழா நடைபெறும்.
4வது நாளில் நீர் நிலைகளில் கூடி மக்கள் பூஜை செய்து சூரிய பகவானை வழிபடுவது வழக்கமாகும். அதேபோல், இந்த ஆண்டின் சாத் பூஜை இன்று தொடங்கியது. இதையொட்டி நீர்நிலைகளில் மக்கள் புனித நீராடுகின்றனர்.
சாத் பூஜையையொட்டி டெல்லியில் 10ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருககிறது. டெல்லி கலிந்தி கஞ்ச் அருகே யமுனை நதியில் பொதுமக்கள் நீராடி மகிழ்ந்தார்கள். யமுனையில் ரசாயனம் கலந்த நீர் நுரை பொங்கி வருவதையும் பொருட்படுத்தாமல் மக்கள் குளித்து மகிழ்ந்தனர்.