தண்ணீரால் சூழ்ந்தது சுடுகாடு பாதை : சடலத்தை கயிறு கட்டி இழுத்துச் சென்ற மக்கள்
சுடுகாடு பாதை முழுவதும் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. இதனால், இறந்தவர்களின் சடலத்தை கொண்டு செல்ல முடியாமல் கயிறு கட்டி இழுத்துச் செல்லும் அவலம் ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதனையடுத்து, திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்துள்ள ஆவணியாபுரம் ஊராட்சிக்குட்பட்ட மதுரா சஞ்சீவி ராயபுரம் கிராமத்தில் சுடுகாட்டுக்குச் செல்லும் பாதையில், 6 அடிக்கு மேல் ஆற்றுநீர் நிரம்பி வழிந்தோடுகிறது.
இதன் காரணமாக, இறந்தவரின் சடலத்தை எடுத்துச் செல்ல முடியாமல் சிரமம் ஏற்பட்டுள்ளது. சடலத்தை சுமந்து செல்லும் பாடையை கயிறு கட்டி இழுத்துச் செல்லும் அவல நிலைக்கு கிராம மக்கள் ஆளாகி இருக்கிறார்கள். இதனையடுத்து, இக்கிராம மக்கள், சுடுகாட்டிற்குச் செல்ல பாலம் கட்டித்தருமாறு மாவட்ட நிர்வாகத்திடமும், அரசிடமும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan
