முன்னாள் மத்திய மந்திரியின் மகன் அரவிந்தர் சிங் உயிரிழந்தார்
samugam
By Nandhini
முன்னாள் மத்திய மந்திரி பூட்டா சிங்கின் மகன் அரவிந்தர் சிங் உயிரிழந்துள்ளார்.
முன்னாள் மத்திய மந்திரி பூட்டா சிங்கின் மகன் தான் அரவிந்தர் சிங். இவருக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள். டெல்லியின் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த அரவிந்தர் (56) நேற்று மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
கடந்த 2008ம் ஆண்டு தியோலி தொகுதியில் நடைபெற்ற சட்டசபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது இறுதிச் சடங்கு டெல்லியில் உள்ள லோதி நகரில் இன்று நடைபெறும் என டெல்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டி தெரிவித்திருக்கிறது.