அரசின் அறிவுறுத்தலினால்தான் சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டது - அப்போலோ மருத்துவமனை விளக்கம்

samugam
By Nandhini Oct 26, 2021 09:15 AM GMT
Report

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, அரசின் அறிவுறுத்தலினாலும், அவரது தனியுரிமை காரணமாகவே சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனை உச்சநீதிமன்றத்தில் விளக்கம் கொடுத்துள்ளது.

இது குறித்து அப்போலோ மருத்துவமனை கொடுத்த விளக்கம் வருமாறு -

ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, அரசின் அறிவுறுத்தலினாலும், அவரது தனியுரிமை காரணமாகவே சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம், தனது அதிகார வரம்பை மீறி செயல்படுகிறது. ஆறுமுகசாமி ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது. எனவே, அதன் மீது நம்பிக்கையில்லை. 

இவ்வாறு விளக்கம் தெரிவித்துள்ளது. 

அரசின் அறிவுறுத்தலினால்தான் சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டது - அப்போலோ மருத்துவமனை விளக்கம் | Samugam