‘பேய் பிடித்து விட்டது...’ - ரத்தம் சொட்ட சொட்ட சூடான இரும்பு சங்கிலியால் தாக்கியதில் இளம் பெண் உயிரிழப்பு

samugam
By Nandhini Oct 15, 2021 08:51 AM GMT
Report

குஜராத்தில் பேய் ஓட்டுவதாக கூறி சூடான இரும்பு சங்கிலியால் தாக்குதல் நடத்தியதில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தின் தேவ்பூமி துவாரகா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரமீலா சோலங்கி (25). இவர் நவராத்திரி கொண்டாடுவதற்காக தனது கணவர் வாலா என்பவருடன் ஒகமதி எனும் கிராமத்திற்கு சென்றார்.

அங்கு அவருக்கு திடீரென நடுக்கம் ஏற்பட்டது. உடனே ரமேஷ் மனைவியை பேய் ஓட்டுபவரிடம் கொண்டு சென்றார். பேய் ஓட்டுபவர் அப்பெண்ணை பார்த்தவுடன் கடவுளின் கோபத்தால் தான் இந்த பெண்ணுக்கு இவ்வாறு ஆகியுள்ளது என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து, இவள் தாக்கப்பட வேண்டும் என்றும், அவ்வாறு தாக்கப்பட்டாமல் விட்டால் இவள் அனைவரையும் கொன்று விடுவாள் என்று அவர் கூறி இருக்கிறார். இதை நம்பிய உறவினர்கள் ரமேஷ், ரமீலாவை தாக்குவதற்கு ஒப்புக்கொண்டார்.

அப்பொழுது அவர் சூடான இரும்பு சங்கிலி வைத்து ரமீலாவை கடுமையாக தாக்கினார். கடுமையாக தாக்கியதில் ரமீலா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ரமீலாவின் கணவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் பேய் ஓட்டுவதாக கூறிய ரமேஷ் மற்றும் வெர்சி சோலங்கி, பவேஷ் சோலங்கி, அர்ஜுன் சோலங்கி மற்றும் மனு சோலங்கி ஆகியோரை கைது செய்தனர். 

‘பேய் பிடித்து விட்டது...’ - ரத்தம் சொட்ட சொட்ட சூடான இரும்பு சங்கிலியால் தாக்கியதில் இளம் பெண் உயிரிழப்பு | Samugam