பயங்கரம் - பட்டப்பகலில் பல்கலைக்கழக வளாகத்தில் மருத்துவ மாணவர் சுட்டு கொலை - அதிர்ச்சி சம்பவம்
டெல்லி குர்கானில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் மருத்துவ மாணவர் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி குர்கானில் இருக்கும் ஸ்ரீ குரு கோவிந்த் சிங் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஷாம்லி மாவட்டத்தை சேர்ந்த வினித் குமார் என்பவர் பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
பல்கலைக்கழகத்தில் 4ம் ஆண்டு ஆயுர்வேத மருத்தும் மற்றும் அறுவை சிகிச்சை பயின்று வந்த வினித்குமாரை கொலை செய்த குற்றவாளி லக்கி என அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதே பல்கலைக்கழகத்தின் சட்ட கல்லூரி மாணவரான லக்கி, வினித்குமாரை கொலை செய்துவிட்டு அவ்விடத்திலிருந்து தப்பிச் சென்று விட்டதாக போலீசார் தரப்பில் தகவல் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து குருகிராம் மேற்கு காவல் ஆணையர் தீபக் அவர்கள் கூறுகையில், முதல்கட்ட விசாரணையில் இது காதல் விவகாரத்தால் ஏற்பட்ட தகராறு என்பது தெரிய வந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டுள்ள லக்கி என்பவரும் அவரது நண்பர்களும் ஏற்கனவே வினோத் குமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் பிறகு தான் இந்த கொலை நடந்துள்ளது. இந்த கொலை தொடர்பாக ஒரு பெண் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, குற்றவாளியையும் தேடும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது என்றார்.