குலாப் ஜாமுனில் கரப்பான்பூச்சி - ரூ.55 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு

samugam
By Nandhini Oct 08, 2021 06:11 AM GMT
Report

கர்நாடகா, பெங்களூரில் உள்ள ஒரு ஓட்டலில் வழங்கப்பட்ட குலாப் ஜாமுனில் கரப்பான் பூச்சி இந்ததால் கூறிய விவகாரத்தில் 55 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி ஓட்டல் நிர்வாகத்துக்கு மாநில நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது. கர்நாடகா, பெங்களூருவைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ராஜண்ணா.

இவர் மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தில், ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், கடந்த 2016ம் ஆண்டு பெங்களூருவின் காந்திநகரில் உள்ள காமத் ஓட்டலில் சிற்றுண்டி சாப்பிட நண்பருடன் சென்றேன்.

2 தோசை மற்றும் குலாப் ஜாமுன் 'ஆர்டர்' செய்தேன். குலாப் ஜாமுன் கிண்ணத்தில் கரப்பான்பூச்சி செத்து இருந்தது. அதைப் படம்பிடிக்க முயன்றேன். அப்போது, சர்வர், என் 'மொபைல் போனை' பறிக்க முயற்சி செய்தார். எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம், பாதிக்கப்பட்ட வழக்கறிஞருக்கு 55 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு ஓட்டல் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து கர்நாடக மாநில நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தில் ஓட்டல் நிர்வாகம் மேல்முறையீடு செய்துள்ளது. அதில் சம்பவம் நடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு பணம் பறிக்கும் நோக்கத்துடன் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த மாநில நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம், மாவட்ட ஆணையத்தின் உத்தரவை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது. 

குலாப் ஜாமுனில் கரப்பான்பூச்சி - ரூ.55 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | Samugam