விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு புத்துயிர் அளிக்கும் முயற்சி அதிரடியாக முறியடிப்பு
விடுதலைப் புலிகளுக்கு புத்துயிர் அளிப்பதற்காக ஆயுதங்கள், போதைப்பொருட்களை கடத்திய வரை தேசிய புலனாய்வு முகமை என்.ஐ.ஏ கைது செய்துள்ளது.
இந்தியாவின் தேசிய புலனாய்வு நிறுவனம் (என்ஐஏ) சென்னையில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியிலிருந்து முன்னாள் விடுதலைப் புலிகள் புலனாய்வு பிரிவு உறுப்பினரை கைது செய்துள்ளது.
300 கிலோ உயர்தர ஹெராயின், 1000 ஏபிஎம் 9 ரவுண்டு குண்டுகளுடன் 5 ஏகே -47 துப்பாக்கிகள் பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்டது என தேசிய புலனாய்வு முகமை கூறியுள்ளது. கடலோர காவல்படை (ஐசிஜி), இந்த ஆண்டின் தொடக்கத்தில் இது குறித்த துப்புக் கொடுத்தது.
கடந்த செவ்வாய்க்கிழமையன்று, சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த 47 வயதுடைய சபேசன் என்ற இலங்கைக் குடிமகனை என்.ஐ.ஏ கைது செய்துள்ளது. அவர் பாகிஸ்தானிலிருந்து ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களை கடத்தி, அதில் இருந்து கிடைக்கும் வருமானத்தை தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான எல்டிடிஈயை புனரமைப்பதற்கு பயன்படுத்தியதாக கூறப்பட்டுள்ளது.