சாலையில் குடிபோதையில் ரகளை செய்த ஆசாமிகள் - தட்டிக்கேட்ட காவலருக்கு அரிவாள் வெட்டு!
சீர்காழி அருகே சாலையோரம் குடிபோதையில் ரகளை செய்தவர்களை தட்டிக் கேட்ட போலீசை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் (32). இவர் திருவாரூர் மாவட்டம் இடையூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், தற்போது அவர் கடலோர காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். இவர் தற்போது விடுப்பில் சொந்த ஊருக்கு வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு பெட்ரோல் பங்க் அருகே சிலர் குடிபோதையில் சாலையோரம் நின்றபடி ரகளையில் ஈடுபடுக்கொண்டிருந்தார்கள். அப்போது அவ்வழியே வந்த சக்திவேல் இதை தட்டிக் கேட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர்கள் அங்கிருந்து சென்றனர். பிறக, காவலர் சக்திவேல் தனது வீட்டிற்கு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது மீண்டும் அங்கு வந்த அந்த நபர்கள் சக்திவேலை கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றுவிட்டார்கள்.
இதில் அவர் தலை மற்றும் கையில் காயமடைந்த போலீஸ் சக்திவேல் சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். இதுகுறித்து தகவலறிந்த பாகசாலை போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு, சக்திவேலிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.