மனைவியுடன் தகாத உறவு - கண்டித்த கணவனை சரமாரியாக குத்தி கொன்ற திமுக பிரமுகர்
கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் சச்சிதானந்தன். இவர் அரியலூர் முன்னாள் திமுக ஊராட்சி மன்றத் தலைவர். இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில், இவருக்கும், மைதிலி என்பவருக்கும் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இந்த விவகாரம் மைதிலியின் கணவர் சீனிவாசனுக்கு தெரியவந்ததது. மனைவி மைதிலியை, இனி சச்சிதானந்தன் உடன் பழக கூடாது என்று கண்டித்துள்ளார்.
இதனால், மைதிலியுடன் தொடர்பு கொள்ள முடியாமல் தவித்து வந்தார் சச்சிதானந்தன். இதனையடுத்து, சீனிவாசனை தீர்த்துக் கட்டினால்தான் மைதிலியுடன் எப்போதும் போல் உல்லாசமாக இருக்க முடியும் என்று முடிவெடுத்த சச்சிதானந்தன், சீனிவாசனை தீர்த்துக் கட்டுவதற்காக நண்பர்களை அழைத்துக் கொண்டு வந்தார்.
இரவு தனியார் கம்பெனியில் வேலை முடிந்து சீனிவாசன் வீடும் திரும்பும் வழியில் கத்தியுடன் காத்திருந்தனர். வேலை முடிந்து இரவு வேனை ஓட்டிக் கொண்டு வந்தார் சீனிவாசன். சமத்துவபுரம் பகுதிக்கு வந்தபோது வேனை மறித்துள்ளனர்.
வேனை மறித்ததும், இறங்கிய சீனிவாசனை சச்சிதானந்தனும், அவரது நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பி ஓடி விட்டனர். இவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
கீழே ரத்த வெள்ளத்தில் துடி துடித்துக் கொண்டிருந்த சீனிவாசனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சீனிவாசன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து சிறுவலூர் காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, மைதிலி, சச்சிதானந்தம் இருவரையும் கோபிசெட்டிபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மைதிலி கோவை சிறையிலும், சச்சிதானந்தன் ஈரோடு சிறையிலும் அடைத்தனர். தலைமறைவாக இருக்கும் சச்சிதானந்தனின் நண்பர்கள் 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.