2 குழந்தைகளை கிணற்றில் தள்ளி விட்டு, தற்கொலைக்கு முயன்ற தாய்! அடுத்து நடந்த பரிதாபம்

samugam
By Nandhini Aug 16, 2021 06:20 AM GMT
Report

திருச்சியில் குடும்ப தகராறில் 2 குழந்தைகளை கிணற்றில் தள்ளி விட்டுவிட்டு தாயும் தற்கொலைக்கு முயன்ற சோக சம்பவம் நடந்துள்ளது.

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் முருக பாண்டியன். இவர் பெயிண்டிங் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சரிதா (30). இவர்களுக்கு இனியாஶ்ரீ (3) மற்றும் 6 மாத குழந்தை கவிதா என 2 குழந்தைகள் இருக்கிறார்கள்.

முருகபாண்டியன் மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர். இதனால், தினமும் குடித்து விட்டு அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், நேற்று தம்பதியினர் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், மனமுடைந்த சரிதா, வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் 6 மாத குழந்தை மற்றும் இனியாஶ்ரீ தள்ளிவிட்டு, தானும் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

நீரில் மூழ்கி இரு குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உயிருக்கு போராடிய சரிதாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

மருத்துவமனையில் சரிதாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, இச்சம்பவத்தை மறைத்து உறவினர்கள் குழந்தைகளை அடக்கம் செய்ய முயன்றதை அறிந்த சோமரசம்பேட்டை போலீசார், குழந்தைகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலுசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

2 குழந்தைகளை கிணற்றில் தள்ளி விட்டு, தற்கொலைக்கு முயன்ற தாய்! அடுத்து நடந்த பரிதாபம் | Samugam