கொரோனா வார்டில் சிகிச்சையளித்த நர்ஸ் மீது பாய்ந்து பாலியல் தாக்குதல் - நெஞ்சை திடுக்கிட வைத்த வீடியோ!

samugam
By Nandhini Aug 10, 2021 10:27 AM GMT
Report

இந்தியாவில் கொரோனா வார்டில் சிகிச்சை அளித்த நர்சுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரின் செயல் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம் ஓங்கோல் ரிம்ஸ் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வார்டில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இங்கு வழக்கம்போல் கடந்த 6ம் தேதி செவிலியர் ஒருவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து கொண்டிருந்தார். அப்போது, அதே வார்டில் இருந்த ஒரு நோயாளியின் உதவியாளரான விஜயகுமார் என்பவர், செவிலியர் மீது கை வைத்து அவரை படுக்கையில் தள்ளி மேலே விழுந்து பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்.

இதை பார்த்த மற்ற நோயாளிகள் மற்றும் அவர்களது உதவியாளர்கள், விஜயகுமாரை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து செவிலியர் ஓங்கோல் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். தற்போது மருத்துவமனையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.