அதிர்ச்சி - கோவில் திருவிழாவில் திமுக நிர்வாகி ஓட ஓட விரட்டி குத்தி கொடூரக்கொலை - மர்மநபருக்கு போலீஸ் வலை!
தூத்துக்குடியை சேர்ந்தவர் நடராஜன். இவர் 45வது வட்ட திமுக பொறுப்பாளராக உள்ளார். இந்நிலையில், சண்முகபுரத்திலுள்ள முனியசாமி கோயில் திருவிழா நடைபெற்றது. அப்போது, இளைஞர்கள் சிலர் மதுபோதையில் நடனமாடிக் கொண்டிருந்தனர்.
மக்களுக்கு தொந்தரவாக இருந்ததால் நடராஜன் அந்த இளைஞர்களை மிரட்டி அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளார். இதனால், அந்த இளைஞர்களுக்கும், நடராஜனுக்கும் சண்டை வந்துள்ளது.
இதனையடுத்து, இன்று அதிகாலை 2 மணியளவில் ராமசாமிபுரத்தில் உள்ள தனது அலுவலகத்திற்கு நண்பர் ஒருவருடன் சென்றுக்கொண்டிருந்தார்.
அப்போது நடராஜனை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அவர் மீது செங்கலை வீசி தாக்குதல் நடத்தினர். பின்னர், மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்த மர்ம நபர்கள் நடராஜனை சரமாரியாக குத்தி விட்டு தப்பியோடி விட்டனர். இந்த தாக்குதலில் சம்பவ இடத்திலேயே நடராஜன் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து போலீசார் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நடராஜனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். நடராஜன் அலுவலகத்தின் வெளியே இருந்த சிசிடிவி கேமரா போலீசார் சோதனை செய்தனர்.
அந்த சிசிடிவி கேமராவில் நடராஜனை இளைஞர்கள் குத்திக் கொலை செய்த காட்சிகள் பதிவாகியிருந்தன. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.