‘ரஸ்னா’ வாங்கிக் குடித்த 13 வயது சிறுமி - திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்ததால் பரபரப்பு!
சென்னை பெசன்ட் நகரில் வசிப்பவர் சதீஷ். இவருடைய மனைவி காயத்ரி. இவர்களுடைய இளைய மகள் தரணி (13). தரணி வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது, நேற்று அவரது தாயிடமிருந்து காசு வாங்கிச் சென்று அருகே உள்ள மளிகைக்கடையில் ‘ரஸ்னா’ வாங்கி குடித்தாள்.
வாங்கி குடித்த சில நிமிடங்களிலேயே சிறுமியின் உடல்நிலை மிகவும் மோசமானது. திடீரென சிறுமிக்கு மூக்கிலிருந்து சிவப்பு நிறத்தில் சளி வந்ததது. மட்டுமல்லாமல் சிறுமி வாந்தி எடுக்க ஆரம்பித்தாள்.
இதை கவனித்த சிறுமியின் சகோதரி தனது தாயிடம் சொல்லி அழைத்து வந்தாள். அப்போது, தரணி மயங்கி விழுந்து, உடல் முழுவதும் நீல நிறமாக மாறியது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தாய், உடனடியாக சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றாள்.
மருத்துவமனையில் சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வேந்த போலீசார், சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், சிறுமி பருகிய குளிர்பானத்தை கைப்பற்றி ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.