13 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு போக்சோ சட்டம் பாய்ந்தது!
கோவையில் தந்தையுடன் வசித்த பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த உறவினரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம், துடியலூரை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இச்சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறாள். பெற்றோர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இதனால், சிறுமி தாய் மற்றும் தந்தையுடன் மாறி மாறி தங்கி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பாக தந்தை வீட்டுக்கு சிறுமி சென்றாள். அப்போது, வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் மாமா பேச்சிமுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், இதனை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியிருக்கிறார்.
இதனால் சிறுமி யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளாள். சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டிற்கு வந்த மகளின் உடலில் காயங்கள் இருப்பதை பார்த்து அவளது தயார் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து, சிறுமியிடம் கேட்டபோது, மாமா பேச்சிமுத்து பாலியல் தொல்லை அளித்தது கூறினாள். இதனையடுத்து, சிறுமியின் தாயார் துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில், போலீசார் பேச்சிமுத்துவை நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, நீதிமன்ற காவலில் அடைத்தனர்.