9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக எரித்துக் கொன்ற பாதிரியார் - ஹேஷ்டேக் டிரெண்ட்

samugam
By Nandhini Aug 03, 2021 11:19 AM GMT
Report

 டெல்லியில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள சுடுகாட்டிற்கு அருகில் பூரண நங்கலில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில், நேற்று 9 வயது சிறுமி குடிநீர் எடுக்க சுடுகாட்டு அருகே சென்றார். மிக நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை.

இதனால், நிலையில் சிறுமியை தேடி சென்ற பெற்றோர்கள் குளிரூட்டி அருகே சிறுமி சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர் திகைத்து நின்றனர்.

அப்போது, அங்கிருந்த பாதிரியார் சிறுமி மின்சாரம் பாய்ந்து இறந்திருக்கலாம் என்று கூறினார். மேலும், தகன மேடை ஊழியர்கள் சலீம், லட்சுமி நாராயண் மற்றும் குல்தீப் ஆகியோரும் சிறுமி மின்சாரம் பாய்ந்து தான் இறந்திருக்கிறார் என்று கூறியுள்ளனர்.

இவர்கள் சொல்வதைக் கேட்டு அதிர்ச்சியில் திகைத்து நின்றனர் பெற்றோர்கள். உடனே பாதிரியாரும், உழியர்களும் சிறுமியின் உடலை இப்போதே எரித்து விட வேண்டும் என்று கூறினார்கள்.

இது குறித்து போலீசில் சொன்னால் குழந்தையின் உடல் உறுப்புகளை திருடி விடுவார்கள் என்று கூறியுள்ளனர். உடனே, அவசர, அவசரமாக உடலை எரிக்க ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

இவர்கள் மேல் சந்தேகமடைந்த தாய், சிறுமியின் உடலை எரிக்கும் போது, நீங்கள் ஏதோ தனது மகளை செய்துவிட்டீர்கள் என கூறியபடியே குழந்தையின் உடலை சோதனை செய்துள்ளார். மேலும் குழந்தையின் மணிக்கட்டு மற்றும் கைகளில் காயம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். சிறுமியின் உதடுகளும் நீல நிறத்தில் இருந்தது. இதனையடுத்து, என் மகளை நீங்கள் அனைவரும் சேர்ந்து கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்து நாடகமாடுகிறீர்கள் என்று கத்தி, கூச்சல் போட்டார்.

அக்கம் பக்கத்தினரை கத்தி கூச்சலிட்டு அழைத்தார். இதனையடுத்து, சிறுமியின் உடலை எரித்து விட்டு 4 பேரும் அங்கிருந்த தப்பி ஓடிவிட்டனர். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து 90 சதவீதம் உடல் எரிந்த நிலையில் சிறுமியின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், எஞ்சிய சடலத்தை வைத்து போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தை அறிந்த உறவினர்கள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட தொடங்கினார்கள். இதனையடுத்து, குற்றவாளிகள் 4 பேரை போலீசார் கைது செய்து 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து செய்திகள் தற்போது வைரலாகி வருகிறது. மேலும், #JusticeForDelhiCanttGirl என்ற ஹேஷ்டேக் உருவாகி நெட்டிசன்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.