அரசு அலுவலகத்தில் உயரதிகாரியை சட்டையை பிடித்து அடித்து தள்ளிய ஊழியர் : வீடியோ வைரலானது!
சுகாதாரத்துறை அரசு அலுவலகத்தில் உயர் அதிகாரியை ஊழியர் ஒருவர் தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
புதுச்சேரி கோரிமேட்டில் மதர் தெரேசா சுகாதார கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் அலுவலக கண்காணிப்பாளர் கோவிந்தராஜ் பற்றி சிலர் அவதூறாக மொட்டை கடிதாசி எழுதி சுகாதாரத் துறைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இது குறித்து, அவர் அலுவலகத்தில் கேட்டுக் கொண்டிருந்தபோது அங்கு வந்த கடைநிலை ஊழியர் ராமன் என்பவர் மீது சந்தேகம் கொண்டு அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் அந்த வாக்குவாதம் முற்றியது. அப்போது, ஆத்திரமடைந்த ராமன் உயரதிகாரி என்று கூட பார்க்காமல் கண்காணிப்பாளரை அடித்து கீழே தள்ளி உதைத்தார்.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் அனைத்தும் சிசிடிவி பதிவாகி உள்ளது. இதன் அடிப்படையில் சுகாதார அறிவியல் நிறுவனம் அவர் மீது தற்போது விசாரணை நடத்தி வருகிறது. இது குறித்த வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.