சார்ஜ் போட்டு பேசிக்கொண்டிருந்த சிறுமி - பட்டுன்னு வெடித்து சிதறிய செல்போன் - அடுத்த நடந்த சோகம்

samugam
By Nandhini Jul 31, 2021 06:26 AM GMT
Report

முன்னெச்சரிக்கை இல்லாமல் செய்த பதினேழு வயது சிறுமி ஒருவரும் தற்போது உயிரிழந்து இருக்கிறார். குஜராத் மாநிலம், சேடாசனா கிராமத்தைச் சேர்ந்த ஷ்ரத்தா தேசாய் (17) என்ற சிறுமி தனது வீட்டின் மேல் மாடி அறையில் அமர்ந்து கொண்டு, செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது, செல்போனில் சார்ஜ் தீர்ந்துவிட்டதால், செல்போனை சார்ஜ் போட்டுவிட்டு மீண்டும் தனது பேச்சினை தொடர்ந்திருக்கிறாள்.

அப்போது திடீரென செல்போன் வெடித்து சிதறியதால் அறை முழுவதும் தீப்பற்றி எறிந்தது.

இவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பெற்றோர்களும், அக்கம் பக்கத்தினரும் ஓடி வந்தனர்.

இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த ஷ்ரத்தா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிறுமியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செல்போன் வெடித்து சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ஜ் போட்டு பேசிக்கொண்டிருந்த சிறுமி - பட்டுன்னு வெடித்து சிதறிய செல்போன் - அடுத்த நடந்த சோகம் | Samugam