மனைவியுடன் தாகாத உறவு வைத்த காதலனின் காது, மூக்கை துடிக்க துடிக்க வெட்டி வீசிய கணவன்!
முஸ்பர்கர் கிராமத்தில் அப்துல் கையும் என்பவர் மனைவியுடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த முஹம்மது அக்ரம் என்ற இளைஞருக்கும் அப்துல் கையும்மின் மனைவிக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இவர்கள் இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இந்த விஷயம் அப்பகுதியினருக்கு தெரிய வந்துள்ளது.
அவர்கள் அப்துல் கையூமிடம் இது குறித்து அப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். அப்துல் கையூம் மனைவியிடம் பல முறை சொல்லி கண்டித்துள்ளார். ஆனாலும் இருவரும் தொடர்ந்து கள்ள உறவில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை அன்று காதலன் முஹம்மது அக்ரம் தனியாக சென்று கொண்டிருந்தார். அப்போது, நண்பர்களுடன் வந்த அப்துல் கையும் அவரை சுற்றி வளைத்தார். அப்போது, நண்பர்கள் முகமது அக்ரமை பிடித்துக்கொள்ள, முகமது அக்ரமின் காது மற்றும் மூக்கை கத்தியால் துடிக்க துடிக்க வெட்டி வீசியுள்ளார் அப்துல் கையும்.
இதில் முகம்மது அக்ரம் வலியால் துடிதுடித்துள்ளார். அவரை விட்டுவிட்டு அப்துல் கையும் மற்றும் அவரது நண்பர்கள் தப்பி ஓடிவிட்டனர். வலியால் துடிதுடித்து சத்தம் போட்டதால், அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக அப்துல் கையுமை போலீசார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.