எப்பா... சிம்பிளா ‘கல்யாணம்’ பண்ணலாம்.. அதுக்காக இப்படியா? நீங்களே பாருங்க...

samugam
By Nandhini Jul 20, 2021 09:35 AM GMT
Report

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால், பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதன்காரணமாக பலரும் தங்களது திருமணத்தை மிக எளிமையாக நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில், இந்திய ராணுவ வீரர் ஒருவர் செய்த திருமணம் அனைவரையும் வியக்க வைத்திருக்கிறது. மத்திய பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்தவர் சிவாங்கி ஜோசி. இவர் இந்திய ராணுவத்தில் மேஜராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கும் தார் நகர மாஜிஸ்திரேட் அங்கித் சதுர்வேதி என்பவருக்கும் இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமண நிச்சயிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக இவர்களது திருமணம் தள்ளிப்போய் கொண்டே இருந்தது. இதனால், திருமணத்தை மிக எளிமையாக நடத்த இருவரும் முடிவு செய்தனர். அதன்படி, நீதிமன்றத்தில் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

இதில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த திருமணத்துக்கு ஆன செலவுதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த பதிவு திருமணத்துக்காக ரூ.500 மட்டுமே அவர்கள் கட்டணமாக செலுத்தியுள்ளனர். இதுதான் இவர்களுடைய திருமண செலவாம். எளிமையாக திருமணம் நடத்தலாம். ஆனால், இவ்வளவு எளிமையா? என்று நெட்டிசன்கள் வியந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும், மணமகனான மேஜர் சிவாங்கி ஜோசி, பெண் வீட்டாரிடம் இருந்து எந்தவித வரதட்சணையும் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.