பெண் மீது ஏறி உட்கார்ந்து தாக்கிய காவல்துறை அதிகாரி - வெளியான வீடியோவால் பரபரப்பு

By Nandhini Jul 19, 2021 09:14 AM GMT
Report

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள துர்கதாஸ்பூர் என்ற கிராமத்தில் அங்குள்ளவர்களில் சிலர் சூதாட்டம் ஆடியதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, அங்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திர படேல் அந்த கும்பலை பிடிக்க முயற்சி செய்தார்.

அப்போது, ஷிவம் யாதவ் என்ற வாலிபரை பிடிக்க முயற்சி செய்தபோது, யாதவின் குடும்பத்தாருக்கும், சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திர படேலுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு கைகலப்பானது. அப்போது, படேல், யாதவின் மனைவி ஆர்த்தி மீது ஏறி உட்கார்ந்தார். அவரது சட்டை காலரை ஆர்த்தி பிடித்து இழுத்துள்ளார்.

இந்த வீடியோ காட்சி தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இது குறித்து படேல் கூறுகையில், ஆர்த்தி தன்னை தாக்கியதாக குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரம் கான்பூரில் தற்போது, பூதாகரமாக வெடித்துள்ளதால் எதிர்க்கட்சிகள் மாநில அரசை கடுமையாக விமர்சித்தனர்.

இந்த சம்பவம் குறித்து ஆர்த்தி கூறுகையில், படேல் என்னை அடித்து கீழே தள்ளி, என் மீது உட்கார்ந்து மீண்டும் என்னை அடித்தார் என்று குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவத்தையடுத்து, கான்பூர் தேஹாட் காவல்துறை கண்காணிப்பாளர் சவுத்ரி, படேலை டிரான்ஸ்வர் செய்து உத்தரவிட்டுள்ளார்.   

பெண் மீது ஏறி உட்கார்ந்து தாக்கிய காவல்துறை அதிகாரி - வெளியான வீடியோவால் பரபரப்பு | Samugam