முதல்முறையாக உயிரிழந்த யானைக்கு கோவிலுக்குள் மணிமண்டபம் கட்டிய மக்கள்!
உலக பணக்கார கோவில்களில் ஒன்று பத்மநாப சுவாமி கோவில். இந்தக் கோவில் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ளது.
இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்கள் மற்றும் கோவில் நிகழ்வுகளில் தர்சினி யானை பங்கேற்று வந்தது.
இந்த யானை மக்கள் மத்தியில் அன்பையும், அரவணைப்பையும் பெற்று வந்தது.
திடீரென கடந்த மே மாதம் 29ம் தேதி தர்சினி யானை நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தது. உயிரிழந்த தர்சினி யானைக்கு மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
தர்சினி யானையின் இறுதி அஞ்சலிக்கு பிறகு கோயில் வளாகத்திலேயே ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தங்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த தர்சினி யானைக்கு மக்கள் மணிமண்டபம் அமைத்துள்ளனர்.
இரண்டரை லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த மணிமண்டபம் தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த மணிமண்டபத்திற்கு ‘அனந்தபுரியின் கெட்டிலம்மா மதிலகம் தர்சினி’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பத்மநாபசுவாமி கோவில் வளாகத்திற்குள்ளேயே இந்த மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளதால், இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் தர்சினியை வணங்கி செல்கின்றனர்.
கோவில் யானைக்கு மணிமண்டபம் கட்டியிருப்பது இதுவே முதல்முறை என்று கூறுகின்றனர் அம்மாநில மக்கள்.