ஒரு “சின்ன மேப்”தான் – நேபாளத்தின் தலையெழுத்தை மாற்றியது! புதிய பிரதமரை நியமித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

samugam
By Nandhini Jul 12, 2021 10:59 AM GMT
Report

நேபாளத்தின் புதிய பிரதமராக, நேபாள காங்கிரஸ் கட்சி தலைவர் ஷெர் பகதூர் தேவ்பாவை அந்நாட்டு உச்சநீதிமன்றம் நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது.

பிரதமர் கேபி ஷர்மா ஒலியின் பரிந்துரைப்படி கடந்த மே மாதம் 22ம் தேதி குடியரசுத் தலைவர் பித்யா தேவி பண்டாரி நாடாளுமன்றத்தைக் கலைத்தார்.

புதிய தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறும் என்றும் அறிவித்திருந்தார். இதை எதிர்த்து நேபாள காங்கிரஸ் கட்சி உட்பட 30 மனுதாரர்களால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டன. இவ்வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணை செய்தது. இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஷெர் பகதூரை பிரதமராக நியமித்து உத்தரவிட்டுள்ளது. இன்னும் 28 மணி நேரத்திற்குள் அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்பார் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு ஆளும் கம்யுனிஸ்ட் கட்சிக்கும், அதன் தலைவரான கேபி ஷர்மா ஒலிக்கு பெரும் பின்னடையை கொடுத்துள்ளது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியாகும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. நேபாளத்தின் இந்த நிலைமைக்கு ஒரு காரணம் உண்டு.

அது என்னவென்றால், ஒரு வரைபடம்தான். சில ஆண்டுகளாகவே கேபி ஷர்மா ஒலி இந்தியாவுடன் மோதல் போக்கை கொண்டார். இதனையடுத்து, சீனாவுடன் அதிகமாக நெருக்மாக இருந்தார். கடந்த ஆண்டு இந்திய-நேபாள எல்லையிலுள்ள சர்ச்சைக்குரிய பகுதிகளை நேபாளத்துடன் இணைத்து புதிய வரைபடம் ஒன்றை வெளியிட்டார். இந்த வரைப்படத்திற்கு இந்திய வெளியுறவுத் துறை கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது.

இதை எதையும் கண்டுகொள்ளாமல் வரைபடத்தை மாற்றவில்லை. ஷர்மா ஒலி தன்னுடைய போக்கில் செயல்பட்டு வந்தார். அதேபோல, ராமர், புத்தர் நேபாளத்தில் பிறந்தவர்கள், யோகா இந்தியாவில் தோன்றவில்லை என கூறினார். இந்த பேச்சு பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. இந்தியாவிக்கு எதிரான அவருடைய அணுகுமுறையை அவருடைய சொந்தக் கட்சித்தலைவர்கள் அனைவருக்குமே பிடிக்கவில்லை.

சொந்த கட்சித்தலைவர்கள் அவருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர். இவருக்கு எதிராக பல எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்து பேசினர். இந்த விவகாரம் பெரியதானது. இந்த விவகாரம் பெரிதானதால் தனது பதவியை விட்டு விலகுமாறு கட்சியினர் வலியுறுத்தினார்கள்.

இதனையடுத்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், உடனே நாடாளுமன்றத்தைக் கலைக்குமாறு குடியரசுத் தலைவருக்கு ஷர்மா ஒலி பரிந்துரைத்தார். இதன்படி, டிசம்பர் 20ம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. புதிய தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றம் குடியரசுத் தலைவரின் உத்தரவுக்கு தடை விதித்தது. ஆனால் மீண்டும் ஒலியின் பரிதுரைப்படி இரண்டாம் முறையாக குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தை மே மாதம் கலைத்தார்.

இதையடுத்து இந்த வழக்கு இறுதி விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம். ஒரு மேப் ஒரு நாட்டின் அரசியலே தலைகீழாக திருப்பியிருப்பது வரலாற்று சுவாரசியமாக இருக்கிறது.

ஒரு “சின்ன மேப்”தான் – நேபாளத்தின் தலையெழுத்தை மாற்றியது! புதிய பிரதமரை நியமித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு! | Samugam