நிலத்தில் தோண்ட தோண்ட கிடைத்த வைரக்கற்கள் - கிராமமே ஒண்ணுக்கூடி சேகரித்ததால் பரபரப்பு!
தென் ஆப்பிரிக்க நாட்டின் குவாசுலு-நடால் மாகாணத்தில் அமைந்துள்ள குவாஹ்லதி கிராமம். 27 வயது கொண்ட இளைஞர் மெண்டோ சபெலோ குவாஹ்லதி கிராமத்தில் சமவெளியில் பள்ளம் தோண்டியுள்ளார்.
அப்போது அந்த பள்ளத்தில் வெள்ளை நிறத்தில் பூமிக்குள்ளிருந்து கற்கள் கிடைத்துள்ளது. இது எப்படியோ காட்டுத்தீயாக அந்த கிராமம் முழுவதும் பரவியது. உடனடியாக அந்த கிராம மக்கள் ஒட்டுமொத்தமாக ஒன்று கூடி அந்த நிலப்பரப்பில் பள்ளம் நோண்டி கற்களை தேடி வருகின்றனர்.
அந்த ஊர் மக்கள் அந்த கற்களை வைரம் என நம்புகின்றனர். மக்கள் தாங்கள் சேகரித்த வைரத்தை ரூ.500 முதல் ரூ.1500 வரை விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த அந்நாட்டின் அரசு, வைரம் இருப்பதாக சொல்லும் அந்த பகுதிக்கு, கனிமவள வல்லுனர்கள் குழுவை ஆய்வுக்கு அனுப்பி உள்ளது. அவர்கள் ஆய்வு முடிவை பொறுத்துதான் அது வைரமா? என்பது தெரியவரும்.