நண்பா... ஓடிவிடு... கோழியை தப்பிக்க உதவிய நாய் - செம்ம வைரல் வீடியோ
பொதுவா செல்லப்பிராணிகள் வளர்ப்பில் பலரும் நாய் வளர்ப்புக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். வீட்டில் வளர்க்கப்படும் நாய்களை தன் பிள்ளைபோலவே உரிமையாளர்கள் வளர்ப்பார்கள்.
நாய்கள் மற்ற விலங்குகளைவிட கூடுதலாக பாசம் காட்டும். வீட்டுக்குத் தேவையான உதவிகளை செய்யும். இந்த வீடியோவிலும் அப்படித்தான். ஒருவர் தன் வீட்டில் நாய் வளர்க்கிறார். கோழி உணவு சமைப்பதற்காக ஒரு நாட்டுக்கோழியை வாங்கி வந்து கூடையில் போட்டு வாசலில் மூடி வைத்துள்ளார்.
இந்நிலையில், தன் நாய்யுடன் உரிமையாளர் வெளியே வந்தபோது, அவர் கண் அசந்த நேரத்தில் நாய் ஓடிப்போய் கூடையை திறந்துவிட்டு, சேவலைத் தப்பித்துப் போக வைத்துள்ளது. அந்தச் சேவலைப் பிடிக்க உரிமையாளர் ஓடிப்போய் முயன்றி செய்தார். ஆனால், நாய் விடாமல் அவரைத் தடுக்கிறது. கூடவே, கோழியை தப்பிக்க வைக்க படு பயங்கரமாக போராடுகிறது.
இந்த வீடியோவை பார்க்கும்போது, நம்மையே நெகிழ வைக்கிறது. இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ -