சிவபெருமான் கையில் மதுபானம் - இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் மீது பாஜக தலைவர் புகார்
ஒரு கையில் மதுபானம், மற்றோரு கையில் செல்போனுடன் சிவ பெருமான் அமர்ந்திருப்பது போன்று ஒரு ஸ்டிக்கர் இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ளதால் இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் மீது பாஜக தலைவர் ஒருவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
அவருடைய புகாரில் இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் சில அதிகாரிகள் மீது குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.
சிவபெருமான் கடவுளை வேண்டுமென்ற தவறாக சித்ததரித்து காட்டப்பட்டுள்ளதாக புதுடெல்லி காவல் நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் மனிஷ் சிங் புகார் கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பிரிவில் காணப்படும் இந்த ஸ்டிக்கரில், சிவன் தனது வலது கையில் ஒயின் கிளாஸையும், தனது இடது கையில் மொபைல் போனையும், தலையில் பூம் ஹெட்போனையும் மாட்டிக்கொண்டு அமர்ந்திருப்பது போல் உருவாக்கப்பட்டுள்ளது.
இது இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளது. மேலும், சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஒரு வீடியோவில், இந்த ஸ்டிக்கர்கள் உடனடியாக அகற்றப்படாவிட்டால், இன்ஸ்டாகிராம் நிறுவனத்துக்கு எதிராக போராட்டம் தொடங்கப்படும் என மனீஷ் சிங் கூறியிருக்கிறார். மேலும், இன்ஸ்டாகிராம் நிறுவனம் இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.