Sunday, Jul 20, 2025

கொரோனா வந்த மனைவியை பாத்ரூமில் அடைத்து வைத்து கணவன் சித்ரவதை!

samugam
By Nandhini 4 years ago
Report

இந்தியாவில் கொரோனாவின் 2ம் அலை அதிகமாக பரவி வருகிறது. கொரோனா பரவலைத் தடுக்க பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தெலுங்கானாவில் உள்ள மஞ்சிரியாலா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பெத்தய்யா. இவரது மனைவி நரசிம்மா. நரசிம்மாவுக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதனையடுத்து, அவருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் நரசிம்மாவுக்கு கொரோனா தொற்று நோய் உறுதியானது. இதனை அறிந்த அவரது கணவர் பாதிக்கப்பட்ட தனது மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் வீட்டில் உள்ள குளியலறையில் தங்க வைத்துள்ளார்.

அவருக்கு உணவு கொடுக்காமலும் துன்புறுத்தி வந்துள்ளார். இந்த விஷயம் அக்கம், பக்கத்தினருக்கு தெரியவந்தது. நரசிம்மா நிலையை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே அங்கு விரைந்து வந்த போலீசார் நரசிம்மாவை மீட்டு, அவரது கணவருக்கு உரிய ஆலோசனை வழங்கி மனைவியை வீட்டில் தனியறையில் தங்க ஏற்பாடு செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  

கொரோனா வந்த மனைவியை பாத்ரூமில் அடைத்து வைத்து கணவன் சித்ரவதை! | Samugam