சாம்சங் அறிமுகம் செய்த கேலக்ஸி ரிங் - எப்போது விற்பனைக்கு வரும்?

Samsung World Technology
By Jiyath Feb 28, 2024 09:26 AM GMT
Report

கேலக்ஸி ரிங் சாதனத்தை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

கேலக்ஸி ரிங் 

சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2024 நிகழ்ச்சியில் கேலக்ஸி ரிங் சாதனத்தை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்தது. உடல்நலம் மற்றும் சுகாதாரம் தொடர்பாக சாம்சங் மேற்கொள்ளும் திட்டங்கள் குறித்தும் அறிவித்தது.

சாம்சங் அறிமுகம் செய்த கேலக்ஸி ரிங் - எப்போது விற்பனைக்கு வரும்? | Samsung Galaxy Ring Showcased At Mwc 2024

இந்த புதிய கேலக்ஸி ரிங் 24 மணி நேரம் மிகவும் சவுகரியமாக அணிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் பயனாளர்கள் தங்களது உடல் ஆரோக்கியம் பற்றிய விவரங்களை துல்லியமாக அறிந்து கொள்ள முடியும்.

விரைவில் எக்ஸ் மெயில் - ஜி மெயிலுக்கு போட்டியாக இறக்கும் எலான் மஸ்க்!

விரைவில் எக்ஸ் மெயில் - ஜி மெயிலுக்கு போட்டியாக இறக்கும் எலான் மஸ்க்!

விற்பனை எப்போது?

உடல்நலம் மற்றும் சுகாதாரம் உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தங்களது பல்வேறு சாதனங்களில் ஏ.ஐ. அனுபவத்தை புகுத்த சாம்சங் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

சாம்சங் அறிமுகம் செய்த கேலக்ஸி ரிங் - எப்போது விற்பனைக்கு வரும்? | Samsung Galaxy Ring Showcased At Mwc 2024

மேலும், உடல்நலம் மற்றும் சுகாதாரம் தொடர்பான சேவைகளை சாம்சங் ஹெல்த்-இல் இணைக்க அந்நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. இந்த புதிய கேலக்ஸி ரிங் அடுத்து நடைபெறும் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டு, பின்னர் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.