பெண்ணின் காதில் வெடித்து சிதறிய இயர்பட்ஸ் - எந்த பிராண்ட் தெரியுமா?
பெண்ணின் காதில் இயர்பட்ஸ் வெடித்து சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெடித்த இயர்பட்ஸ்
துருக்கியை சேர்ந்த ஒரு பெண் தனது சாம்சங் கேலக்ஸி பட்ஸ் எஃப்இ இயர்பட்ஸ் (Samsung Galaxy Buds FE) சாதனத்தை வழக்கம் போல பயன்படுத்தி இருக்கிறார்.
ஆனால், எதிர்பாராத விதமாக அந்த இயர்பட்ஸ் அவர் காதில் இயங்கிக்கொண்டிருக்கும் வேளையிலேயே வெடித்து சிதறியுள்ளது. இதனால் அந்த பெண் கடுமையான காயம் அடைந்ததால் கேட்கும் திறனை இழந்துள்ளார்.
பெண் அவதி
இச்சம்பவத்தை அவரது கணவர் சாம்சங் துருக்கி சமூக மன்றத்தில் பகிர்ந்துள்ளார். தொடர்ந்து Samsung பயனர்கள், வாடிக்கையாளர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் கடுமையான நடவடிக்கைகளை நிறுவனம் எடுக்க வேண்டும் என்று பலரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
இந்நிலையில், சேதமடைந்த இயர்பட்ஸை சாம்சங் நிறுவனம் மாற்றி தருவதாக தெரிவித்துள்ளது. விசாரணையில் வெடிப்புக்கு தெளிவான காரணம் எதுவும் கண்டறியப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, நிறுவனம் இதை பெரியளவில் பொறுப்பேற்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.