சாம்சங் துணைத் தலைவர் லீ-க்கு 2 1/2 ஆண்டு சிறைத் தண்டனை: ஏன் தெரியுமா?
சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் துணைத் தலைவர் ஜே ஒய் லீ-க்கு இரண்டரை ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தென் கொரியாவின் சியோல் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உலக அளவில் மின்னணுத் தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனமாக உள்ளது சாம்சங் இந்த நிறுவனத்தின் செல்போன், லேப்டாப் உள்ளிட்ட பொருட்களுக்கு உலக அளவில் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை தன் வசம் இழுத்துள்ளது.
இந்த நிலையில், சமீபத்தில் இந்த நிறுவத்தின் தலைவர் லீ காலமானார். இதையடுத்து லீயின் மகன் ஜே ஒய் லீ(52) இந்த நிறுவத்தின் துணைத்தலைவராகப் பொறுப்பேற்றார். இவர் தென் கொரிய அரசின் அதிகாரபூர்வ ஆதரவை பெறுவதற்காக அதிபர் பார்க் கியுன்-ஹேயின் தோழி நடத்தி வந்த தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு ஜே ஒய் லீ நன்கொடைகள் வழங்கினார். இதனால் இவர் மீது லஞ்சம் மற்றும் பணம் மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு.
ஜே ஒய் லீ உள்ளிட்ட 4 முக்கிய தலைவர்கள் மீது லஞ்ச, ஊழல் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த 2017-ம் ஆண்டு ஜே ஒய் லீ சிறையில் அடைக்கப்பட்டார். சில மாத சிறையில் இருந்த நிலையில், தண்டனை குறைக்கப்பட்டு மேல்முறையீட்டில் தண்டனையும் இடைநீக்கம் செய்யப்பட்டது.
ஆனால் இந்த வழக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம், சியோல் உயர் நீதிமன்றத்திற்கு மாறியது.
தற்போது சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் துணைத் தலைவர் ஜே ஒய் லீ-க்கு இரண்டரை ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.