முதல்வரை எதிர்த்து போட்டியிடும் சம்பத் குமாரின் பரபரப்பு பேட்டி
எடப்பாடி தொகுதியில் பழனிசாமி அவர்களை எதிர்த்து வெற்றிபெற எங்கள் சாதனைகளை சொன்னாலே போதும் திமுக சார்பில் போட்டியிடும் சம்பத்குமார் தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பாளர்களை பல்வேறு கட்சிகளும் அறிவித்து வந்த நிலையில்.
திமுக தற்போது அமைத்துள்ள மெகா கூட்டணியின் வேட்பாளர் பட்டியலை இன்று அறிவித்தது. முன்னதாக திமுக கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் கருணாநிதி அவர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று மதியம் 12.30 மணியளவில் திமுகவின் வேட்பாளர்கள் பட்டியலை முக ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார்.
அதில் முக்கிய தொகுதியான எடப்பாடி தொகுதியில் அவரை எதிர்த்து சம்பத்குமார் அவர்கள் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சம்பத்குமார் கூறியதாவது, ''எங்கள் தலைவர் மற்றும் கருணாநிதியின் சாதனையைச் சொன்னாலே வெற்றிதான். கரோனா காலத்தில் நாங்கள் மக்களுக்குச் செய்த நலத்திட்டங்கள் மூலம் வெற்றி பெறுவோம்.
எங்களின் எடப்பாடி தொகுதிக்குத் தமிழக முதல்வர் எதுவுமே செய்யவில்லை. 10 ஆண்டுகளாக அவர் அமைச்சராக இருந்திருக்கிறார். ஆனால் முறையான வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரவில்லை.
எங்கள் தொகுதியில் சுமார் 10 ஆயிரம் இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி உள்ளனர். இவை அனைத்துக்கும் எங்கள் ஆட்சியில் விடியல் காணப்படும்" என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.