சமோசாவுக்காக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட இளைஞர்! அதிர்ச்சி சம்பவம்!

fire death increase samosa rate youngman
By Anupriyamkumaresan Jul 29, 2021 09:54 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in குற்றம்
Report

மத்திய பிரதேசத்தில் திடீரென சமோசா விலை உயர்ந்ததால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமோசாவுக்காக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட இளைஞர்! அதிர்ச்சி சம்பவம்! | Samosa Rate Increase Youngman Fire Death

மத்திய பிரதேச மாநிலம் அமர்கன்டக் பகுதியை சேர்ந்த சாஹு அப்பகுதியில் சமோசா கடை ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த 22-ம் தேதி அன்று அப்பகுதியை சேர்ந்த பஜ்ரு என்பவர் அவரது நண்பர்களுடன் சேர்ந்து அந்த கடையில் சமோசா வாங்கி சாப்பிட்டுள்ளார்.

இத்தனை நாட்கள் இரண்டு சமோசா 15 ரூபாய் விற்று வந்த சாஹு தற்போது 20 ரூபாய் விலை ஏற்றம் செய்ததை பஜ்ரூ அறியவில்லை. இதனால் பனம் கொடுக்கும் போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

சமோசாவுக்காக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட இளைஞர்! அதிர்ச்சி சம்பவம்! | Samosa Rate Increase Youngman Fire Death

இந்த வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரத்தில் பஜ்ரு பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பஜ்ரூவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் எதிர்பாராத விதமாக பஜ்ரு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.