தீபாவளி கொண்டாடத ஒரே இந்திய கிராமம் - துரத்தும் கர்ப்பிணி சாபம்!
பல நூற்றாண்டுகளாக இந்திய கிராமம் ஒன்று தீபாவளியை கொண்டாடாமல் உள்ளது.
பெண் சாபம்
இமாச்சலப் பிரதேசம், சம்மூ என்ற கிராமத்தில் பல நூற்றாண்டுகளாகத் தீபாவளியைக் கொண்டாடுவதில்லை. இதற்குப் பின்னணியில் ஒரு பெண்ணின் சாபம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
கணவனை இழந்த அந்த பெண், கணவனின் உடலுக்கு மேல் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். கர்ப்பிணிப் பெண் தனது கணவருடன் தீபாவளி கொண்டாடக் காத்துக் கொண்டிருந்தார்.
நடுங்கும் கிராமம்
அங்கு மன்னரின் படையில் போர் வீரராக இருந்த தனது கணவர் வீட்டிற்கு வருவார் என அந்த பெண் ஆவலாக இருந்தார். இருப்பினும், அப்போது அவரது கணவன் வரவில்லை. மாறாக அவரது உடலை வீட்டிற்கு எடுத்து வந்துள்ளனர்.
இந்த துயரத்தில் கிராம மக்கள் தீபாவளியைக் கொண்டாடக் கூடாது என்று சாபமிட்டுள்ளார். அதிலிருந்து அந்த கிராமத்தால் தீபாவளியைக் கொண்டாட முடிவதில்லையாம். எதாவது ஒரு குடும்பத்தினர் தீபாவளியைக் கொண்டாடினால் அங்கு மரணமும், பேரழிவும் ஏற்படும் என நம்புகின்றனர்.
மேலும், பெண்ணின் சாபத்தை நீக்கப் பல ஆண்டுகளாகக் கிராம மக்கள் பல்வேறு சடங்குகள் மற்றும் மத வழிபாடுகளைச் செய்துள்ளனர். இருப்பினும், அது எதற்கும் பலன் இல்லை என்கின்றனர்.