குழந்தை குறித்து பேசிய ரசிகர் - கோபத்தில் திட்டித் தீர்த்த பிர்பல நடிகை
பிரபல சீரியல் நடிகை சமீரா குழந்தை குறித்த நெகடிவ் கமெண்ட் தெரிவித்த ரசிகருக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்..
விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலில் நடித்த சமீரா, அதே நாடகத்தில் நடித்த சையத் அன்வரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த ஜோடி நான்கு ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில் 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளம் இருக்கும் நிலையில் சமீரா - சையத்தின் திருமண புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலானது.
இதனிடையே இந்த ஆண்டு ஆரம்பத்தில் சமீரா - சையத் தம்பதியினர் தங்கள் குடும்பத்திற்கு ஒரு புதிய உறுப்பினரை வரவேற்கத் தயாராக இருப்பதாக அறிவித்தனர். இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் சமீரா, அவரது கணவரும் ஒரே மாதிரியான டீ சர்ட் அணிந்துகொண்டு தங்களுக்கு குழந்தை விரைவில் வர இருப்பதை மகிழ்ச்சியாக பகிர்ந்து கொண்டனர்.
மேலும் கர்ப்பமாக இருக்கும் போதும் ஜாலியாக நடனமாடும் வீடியோக்களையும் அவ்வப்போது ஷேர் செய்தார். இதுகுறித்து விமர்சனங்கள் வந்த போதிலும் அதனை காதில் வாங்கிக்கொள்ளாமல் கூலாக தனது கர்ப்பகாலத்தை சமீரா கழித்தார்.
இதனைத் தொடர்ந்து சமீராவிற்கு செப்டம்பர் 4 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து அவரது கணவர் பதிவில், சமீரா குழந்தையை வைத்திருக்க, சமீராவின் நெத்தியில் முத்தமிட்டவாறு இருந்த புகைப்படத்தை ஷேர் செய்திருந்தார்.
மேலும் இந்த முழு பயணத்திலும் நாங்கள் வலுவாக இருக்க எங்களது ரசிகர்களாகிய நீங்கள் முக்கிய பங்கு வகித்தீர்கள் மற்றும் குழந்தை மற்றும் தாய்க்கு உங்கள் 100% ஆதரவை வழங்கினீர்கள் என்பதால் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
எங்களைப் பிடிக்காதவர்களிடம் தாழ்மையான வேண்டுகோள், தயவுசெய்து உங்கள் எதிர்மறை கருத்துக்களை குழந்தையிடம் இருந்து விலக்கி, எந்தவிதமான ஆபாச செய்திகளை வெளியிடாமல் நல்ல மனிதராக இருங்கள் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்தநிலையில் சமீபத்தில் தனது யூடியூப் பக்கத்தில் தன் குழந்தையுடன் இருக்கும் வீடியோ ஒன்றை ஷேர் செய்திருந்தார். இந்த வீடியோவிற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த இணையவாசி ஒருவர், ‘குழந்தையை தலையில் கை வைத்து தூக்குங்கள்’என்று கமெண்ட் பிரிவில் கூறியுள்ளார். இந்த கமெண்ட்டிற்கு பதிலளித்துள்ள மற்றொரு நெட்டிசன் ஒருவர், ‘அதுக்காக அவர் வருத்தப்படும் வரை அதை அவர் செய்ய மாட்டார்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மற்றொருவர், கேமராவிற்கு முன்னர் பால் கொடுக்க வேண்டாம். பார்க்கவே அருவருப்பாக இருக்கிறது என்று கூறியிருந்தார். இந்த கமெண்ட்டிற்கு பதில் அளித்துள்ள சமீரா, அது எப்படி அருவருப்பா இருக்கும்? ‘பால் கொடுப்பதை ஒரு சாதாரண விஷயமாக ஏன் பார்க்க மாட்டேங்குறீங்க . சின்ன குழந்தைக்கு உணவளிப்பதை அருவருப்பாக பார்க்கும் உங்களை பார்த்தால் எனக்கு பாவமாக இருக்கிறது என தனது பாணியின் ரிப்ளை கொடுத்துள்ளார்.