மிரட்டி அப்படி பண்ண சொல்லுவாங்க; எனக்கும் கூட.. சமீரா ரெட்டி பளீச்!
படுக்கையறை காட்சியில் நடிப்பது குறித்து நடிகை சமீரா ரெட்டி பேசியுள்ளார்.
நடிகை சமீரா ரெட்டி
தமிழில் வாரணம் ஆயிரம் மூலம் அனைவரையும் இன்றுவரை கட்டிப்போட்டவர் நடிகை சமீரா ரெட்டி. ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து அசல், வெடி, வேட்டை உள்பட ஒரு சில படங்களில் நடித்தார்.
2014-ம் ஆண்டு அக்ஷய் வர்தே என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பின் சினிமா விட்டி விலகி குடும்பம் குழந்தை என செட்டிலாகி விட்டார். இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், ஒரு படத்தின் ஷூட்டிங் இருந்தபோது ஒரு காட்சியை முடித்துவிட்டு ஓய்வெடுத்துக் கொண்டு இருந்தேன்.
படுக்கையறை காட்சி
பின்னர், திடீரென இயக்குனர் என்னிடம் வந்து அடுத்த காட்சி லிப்லாக் காட்சி என்று சொல்லிவிட்டு சென்றார். என்னிடம் எந்த ஒரு முன்னறிவிப்பு சொல்லவில்லை. இப்ப திடீரென லிப்லாக் காட்சி என்று சொல்கிறீர்களே என நான் பதறிப் போய் என்னால் நடிக்க முடியாது என்று கூறினேன்.
அதற்கு அவர், இதுக்கு முன்னாடி நீங்க நடித்த முசாபர் படத்தில் மட்டும் லிப்லாக் காட்சிகள் இருந்தது. இதுல நடிக்க முடியாதா? முடிந்தால் நடியுங்கள் இல்லை என்றால் இந்த படத்தை விட்டு வெளியே போங்கள் என்று சொல்லி விட்டு சென்று விட்டார். லிப்லாக் காட்சியில் நடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு நான் தள்ளப்பட்டேன்.
இப்படித்தான் தேவையான படுக்கை அறை காட்சிகள் மிகவும் கிளாமரான உடைகள் அணிந்து நடிக்க வேண்டிய கட்டாயங்கள் ஹீரோயின்களுக்கு ஏற்படும்.
லிப்லாக் காட்சிகள் உள்ளவற்றில் அவர்களுக்கு தேவைப்பட்டால் நாம் நடிக்க வேண்டும் என மிரட்டி அந்த காட்சியை எடுத்து விடுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.