ஓரினச் சேர்க்கை திருமணம்; கடுமையாக எதிர்க்கும் மத்திய அரசு - ஏன்?
ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்திற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஓரினச் சேர்க்கை
ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்தை சிறப்பு திருமண சட்டத்தின்கீழ் அங்கீகரிக்கக் கோரி நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளது.

மேலும் மனுவில், ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்தை அங்கீகரித்தால், சட்டத்தின் ஒரு பகுதியையே மீண்டும் எழுத வேண்டிய நிலை ஏற்படும். பல்வேறு தரப்பினரும் தொடர்ந்துள்ள வழக்குகளில் நீதிமன்றம் ஒரே தீர்ப்பை வழங்க கூடாது.
எதிர்ப்பு
திருமணச் சட்டத்தில் மாற்றங்களை செய்வது நாடாளுமன்றத்தின் மூலமாகவே நடைபெற வேண்டும் என்றும் அந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று சட்டம் இயற்றும் அமைப்புகளுக்கு உத்தரவிட முடியாது.வழக்கு தொடர்ந்துள்ளவர்கள் ஒட்டு மொத்த சமுதாயத்தின் எண்ண ஓட்டத்தை பிரதிபலிக்க வில்லை,

நகர்ப்புறத்தில் உள்ள மேல்தட்டு மக்களின் கருத்துக்களே.
திருமண பந்தங்கள், நாட்டின் சமுதாய அமைப்பில் வேரூன்றி உள்ளது. அனைத்து மதங்களிலும், புனிதமாக கருதப்படுகிறது. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நடைபெறும் திருமணத்தையே அனைத்து மதங்களும் அங்கீகரிக்கிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Bigg Boss: உங்க வீட்டுல இப்படியா வளர்த்திருப்பான் உன்னையெல்லாம்? தரையில் அமர்ந்து வெடித்த விஜய் சேதுபதி Manithan
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan