நடிகை சமந்தா விவகாரத்து விவகாரம்: அவரது அப்பாவிற்கு ஏற்பட்ட கதி
நடிகை சமந்தாவின் விவாகரத்து விவகாரம் தொடர்பாக அவரது தந்தை முதல்முறையாக கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நட்சத்திர ஜோடிகளாக வலம்வந்த இருவரும் விவாகரத்து செய்ய போவதாக சமீப காலமாகவே ஊடகங்களில் செய்திகள் பரவிய நிலையில் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
இந்த சம்பவம் திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், நடிகர் நாக சைதன்யாவின் அப்பாவும், சமந்தாவின் மாமனாருமான நடிகர் நாகார்ஜூனா வருத்தம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சமந்தாவின் விவாகரத்து விவகாரம் குறித்து அவரது தந்தை ஜோசப் பிரபுவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், என் மகளும், மருமகனும் பிரிந்துவிட்டதை அறிந்ததில் இருந்து மைண்ட் பிளாங்காகிவிட்டது. எல்லாம் விரைவில் சரியாகிவிடும் என்று தான் நம்பினோம்.
ஆனால் ஆகவில்லை. என் மகள் நன்கு யோசித்து இந்த முடிவை எடுத்திருப்பார் என்று தெரிவித்துள்ளார். அதேசமயம் 4வது திருமணநாளை கொண்டாட வேண்டிய நேரத்தில் விவாகரத்து குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
சமந்தாவும், நாக சைதன்யாவும் பிரிந்துவிட்டாலும் இது நிரந்தரம் இல்லை என்று ரசிகர்கள் நம்புகிறார்கள். அவர்களிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி ஒன்று சேர்த்து வைக்குமாறு நாகர்ஜூனாவிடம் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.