பனிசறுக்கில் சறுக்கி விழுந்த நடிகை சமந்தா - வெளியான வீடியோவால் ஷாக்கான நடிகர்கள்
நடிகை சமந்தா சமீபத்தில் ஸ்வார்லாந்த் சென்றிருக்கிறார். அங்கு தனது மொத்த கவலைகளையும் மறந்த சமந்தா குழந்தையாக மாறி இருக்கிறார்.
இந்நிலையில், பனிச்சறுக்கு செய்கையில் கீழே விழுந்து புரளும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
விவாகரத்துக்கு பின் எழுந்த சில வதந்திகள் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான நடிகை சமந்தாவும், நாக சைதன்யாவும் தற்போது அதில் இருந்து மீண்டு சினிமாவில் தங்களுடைய செகண்ட் இன்னிங்க்ஸை வேற லெவலுக்கு துவங்கி இருக்கிறார்கள்.
விவாகரத்துக்கு பின் இவர்கள் இருவரது சினிமா கெரியரும் சக்சஸ்புல்லாக இருந்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க, இவர்கள் இருவரும் மீண்டும் இணைய இருப்பதாக டோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபட தொடங்கி இருக்கிறது. அவர்களது சமீபத்திய நடவடிக்கைகளும், ஒரு வேளை அப்படி இருக்குமோ என யோசிக்க வைத்துள்ளது.
சமீபத்தில் பங்கார்ராஜு பட புரமோஷன் போது சமந்தா குறித்த கேள்விக்கு பதிலளித்த நாக சைதன்யா, தனக்கு சிறந்த ஜோடி சமந்தா தான் என்று கூறினார்.
அதேபோல் நடிகை சமந்தா கடந்த அக்டோபர் மாதம் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட விவாகரத்து அறிவிப்பு தொடர்பான அறிக்கையை திடீரென டெலிட் செய்திருக்கிறார்.
இந்நிலையில், Switzer land-க்கு சுற்றுலா சென்ற நடிகை சமந்தா, அங்கு அவர் பனிச்சறுக்கு செய்கையில் கீழே விழுந்து புரளும் வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் இந்த வீடியோவை பார்த்த அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.