இந்த ஆண்டு அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட நடிகர், நடிகைகள் யார், யார்ன்னு தெரியுமா...?
2022ம் ஆண்டு அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட நடிகர், நடிகைகளின் பற்றி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தங்களுக்கு நோய் இருந்தால் பட வாய்ப்புகள் வராமல் போவது அந்தக் காலம். ஆனால், இந்த காலத்தில் நடிகர், நடிகைகளுக்கு நோய் இருந்தாலும், அதை தைரியமாக எதிர்கொள்ளும் பிரபலங்களுக்கு இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் பட வாய்ப்புகள் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள்.
நடிகை சமந்தா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தமிழ் தவிர, தெலுங்கு, இந்தி உட்பட பல மொழிகளில் நடித்து வருகிறார். சமீபத்தில், தனக்கு மயோசிடிஸ் எனும் அரிய வகை நோய் இருப்பதாக சமூகவலைத்தளங்களில் நடிகை சமந்தா அறிவித்தார்.
இத்தகவல் அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. சமந்தா மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த புகைப்படமும் சமூகவலைத்தளங்களில் மிகவும் வைரலாக பரவி சினிமாத்துறையையும், ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்தது. அதை பார்த்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமந்தாவுக்கு ஆறுதல் கூறினார்கள்.
வருண் தவான்
பாலிவுட்டின் பிரபல நடிகராக வலம் வருபவர் வருண் தவான். இவரும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறார். இவருக்கு Vestibular hypofunction எனும் அரிய வகை நோய் இருப்பதாக சமீபத்தில் டுவிட்டரில் தெரிவித்தார்.
இவரின் இத்தகவலை பார்த்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது இவர் யோகா, பிசியோ, நீச்சல், லைஃப்ஸ்டைலை மாற்றிய பிறகு தற்போது தான் நன்றாக இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.
நடிகை பூனம் கவுர்
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பூனம் கவுர். இவருக்கும் ஃபைப்ரோமயால்ஜியா என்ற அரிய வகை நோய் பாதிக்கப்பட்டார். இத்தகவலை அறிந்து இவருடைய ரசிகர்கள் இருப்பதாக மிகுந்த கவலையில் ஆழ்ந்தனர்.