விவாகரத்து விவகாரம் - ட்விட்டரில் பெயரை மாற்றிய நடிகை சமந்தா: ரசிகர்கள் அதிர்ச்சி!
நாகசைதன்யாவுடன் விவாகரத்து செய்து கொண்டதன் பின் சமந்தா தனது பெயரை ட்விட்டரில் பெயரை மாற்றியுள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
தமிழ் மட்டுமில்லாது தெலுங்கிலும் அதிக ரசிகர்களை கொண்ட நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. அநேகமான ரசிகர்களின் கனவு கன்னியாக இன்றளவுவம் திகழ்ந்து வருபவர் சமந்தா.
அதிகமான வெற்றி படங்களை கொடுத்துள்ளார். தெலுங்கில் நடித்த பொழுது சக நடிகரும், தெலுங்கில் முன்னாள் கதாநாயகரான நாக அர்ஜுனின் மகனுமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
2017 ஆம் ஆண்டில் வெகு விமரிசையாக திருமணமும் செய்து கொண்டனர். மகிழ்ச்சியாகவே சென்று கொண்டிருந்த வாழ்க்கையில், சமீபத்தில் சமந்தா தனது வலைத்தள பக்கத்தில் அக்கினேனி என்ற தனது குடும்ப பெயரை மாற்றி வைத்தார்.
அதில் இருந்து தான் பிரச்சனை எழுந்தது. அதில் இருந்து நாக சைதன்யா மற்றும் சமந்தா விவாகரத்து செய்யப்போவதாக வதந்திகள் பரவியது. இருப்பினும் இரு தரப்பிலும், எந்த ஒரு தகவலும் அளிக்கப்படவில்லை.
நாளுக்கு நாள் இவர்கள் குறித்த வதந்திகள் அதிகரித்துக் கொண்டே சென்ற நிலையில் அதற்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக சமீபத்தில் இவர்கள் இருவரும் கூட்டாக தங்களின் விவாகரத்தினை அறிவித்தனர்.
இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
விவாகரத்திற்கு பின்னர் சமந்தா தற்போது அதிகாரப்பூர்வமாக ட்விட்டர் பக்கத்தில் மீண்டும் தனது பெயரை மாற்றியுள்ளார். முன்னர் S என்று இருந்த நிலையில் மீண்டும் சமந்தா என்று பெயரை மாற்றியுள்ளார்.