விளம்பரத்திற்காக சமந்தா செய்த செயல் - அதிர்ச்சியில் ரசிகர்கள்

நடிகை சமந்தா சிக்ஸ் பேக்ஸ் லுக்கில் இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா நடிகர் நாகர்ஜூனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

திருமணத்துக்கு பின்னர் ட்விட்டரில் கணவரின் குடும்பப்பெயரான அக்கினேனியை தன் பெயருக்கு பின்னால் சேர்த்துக்கொண்டு சமந்தா அக்கினேனி என மாற்றிக்கொண்டார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு ட்விட்டரில் தன் பெயரை முழுமையாக நீக்கிவிட்டு ஆங்கில எழுத்தான ‘S’ என்று மாற்றினார். இதனால் சமந்தா நாக சைதன்யாவை விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல் வெளியானது.

இதற்கு நேரடியாக பதிலடி கொடுக்காமல் மறைமுகமாக ஊடகங்களை சமந்தா சாடியிருந்தார். இந்நிலையில் சமந்தா சர்வதேச பிராண்டான Louis Vuitton-இன் கைப்பை விளம்பரத்தில் நடித்திருக்கிறார்.

அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ளார். அதில் கவர்ச்சியாக சிக்ஸ் பேக் உடல் அமைப்பில் இருக்கும் சமந்தாவை பார்த்து ரசிகர்களே ஆச்சரியப்பட்டுள்ளனர்.

அதேசமயம் சூப்பரா ஒர்க்அவுட் செய்கிறீர்கள் போன்று என்று பிரபலங்களும், ரசிகர்களும் தெரிவித்துள்ள நிலையில் ஒரு கைப்பை விளம்பரத்திற்கு போய் இந்த அளவுக்கு கவர்ச்சி தேவையா என்றும் சிலர் விமர்சித்திருக்கிறார்கள். 

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்