சினிமாவில் இருந்து பிரேக் எடுக்கும் சமந்தா; மறுபடியும் என்னாச்சு - ரசிகர்கள் ஷாக்!

Samantha
By Sumathi Jul 05, 2023 02:30 PM GMT
Report

1 வருடம் சினிமாவில் இருந்து நடிகை சமந்தா பிரேக் எடுக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை சமந்தா

தென் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. 2017ல் நாகார்ஜுனாவை திருமணம் செய்துக் கொண்டார்.கருத்து வேறுபாட்டால் இருவரும் 2022ல் பிரிந்தனர்.

சினிமாவில் இருந்து பிரேக் எடுக்கும் சமந்தா; மறுபடியும் என்னாச்சு - ரசிகர்கள் ஷாக்! | Samantha To Take Break From Acting For Health

சமீபத்தில், அரிய வகை தசை அழற்சி நோயான ‘மயோசிட்டிஸ்’ எனும் நோயால் பாதிக்கப்பட்டுள்ள காரணத்தால் வெளியே எங்கும் செல்லாமல், தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சைகளுக்கு பிறகு கம் பேக் கொடுத்த சமந்தா படப்பிடிப்பை தொடங்கினார்.

 ஹெல்த்தில் கவனம்

வருண் தவானுடன் சிட்டாடெல் வெப் சீரீஸிலும் நடித்து முடித்தார். தற்போது குஷி படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ள நிலையில் நடிப்பதில் இருந்து ஒரு வருடம் சமந்தா பிரேக் எடுக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சினிமாவில் இருந்து பிரேக் எடுக்கும் சமந்தா; மறுபடியும் என்னாச்சு - ரசிகர்கள் ஷாக்! | Samantha To Take Break From Acting For Health

மேலும், தயாரிப்பாளர்களிடம் இருந்து பெற்ற முன் பணத்தை திருப்பி கொடுத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையில் தனது உடல் நலத்தில் கவனம் செலுத்தப்போவதாக தெரிகிறது. இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.