விவாகரத்துக்குப் பின் சமந்தா எடுக்கும் அதிரடி முடிவு - இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்
நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் 'புஷ்பா' படத்தில் நடிகை சமந்தா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் படம் 'புஷ்பா' படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்த படத்தில் ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடித்து வருகின்றனர்.
இப்படம் முழுக்க முழுக்க செம்மரக்கடத்தல் மற்றும் அவர்களுடைய வாழ்க்கையை எடுத்துக் கூறும் வகையிலும் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராகவும், மரம் கடத்துபவராகவும் மிரட்டலான தோற்றத்தில் நடித்துள்ளார்.
#Samantha special song in #Pushpa ? pic.twitter.com/tdHnMMjYd3
— Thyview (@Thyview) November 15, 2021
மேலும் பிரபல மலையாள நடிகர் ஃபஹத் பாசில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்துள்ளார். 'புஷ்பா' படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, என மொத்தம் ஐந்து மொழிகளில் உருவாகியுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் ஒரு குத்துப் பாடல் இடம்பெற உள்ளதாம். அப்பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆட முன்னணி நடிகைகள் சிலரிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. தற்போது நடிகை சமந்தாவை அப்பாடலுக்கு நடனமாட ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுவரை நாயகியாக மட்டும் நடித்து வந்த சமந்தா முதன் முதலாக குத்துப் பாடலுக்கு நடனமாட சம்மதித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.