படத்தில் மட்டும் அல்ல,நிஜத்திலும் நான் இப்படி தான் - நடிகை சமந்தா அதிரடி..!
நயன்தாரா,சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல் இத்திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி தியேட்டர்களில் வெளியானது.
இந்த படத்தில் நடிகை சமந்தா கத்தீஜா கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.அவரின் நடிப்பு பெரும்பாலான ரசிகர்களுக்கு பிடித்து போனது. பலரும் நடிகை சமந்தாவின் கதீஜா கதாபாத்திரத்தை பெரும் அளவில் பேசு பொருளாக மாற்றினர்.
இதை அடுத்து #Khatija என்ற ஹேஸ்டேக் ட்விட்டர் அளவில் டிரெண்டானது. இந்நிலையில் நடிகை சமந்தா இதற்கு தனது ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்து கொண்டார். இதனிடையே நடிகை சமந்தா காத்து வாக்குல ரெண்டு காதல் பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,
இத்திரைப்படத்தில் கத்தீஜா கதாபாத்திரத்தை கொடுத்த இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். எனக்கு பிடித்தது காமெடி.நான் நிஜத்தில் இருப்பது போன்று நடிக்க வாய்ப்பு கிடைக்கும் போது அது கூடுதல் சிறப்பு.
வாக்கு அளித்ததை விட அதிகமாக செய்துவிட்டீர்கள் அதற்கு நான் நன்றி கடன் பட்டிருக்கிறேன்.
என நன்றி தெரிவித்து கொண்டார்.
திக்திக் நிமிடங்கள்: பயங்கரத் திட்டத்துடன் இருந்த ஓமன் துணை விமானி - அதிர வைக்கும் பின்னணி IBC Tamil
மரணத்திற்கு அஞ்சாமல் விமானத்தை மோதச் செய்ய விரும்பினேன்: ஃப்ளைதுபாய் துணை விமானி பரபரப்பு வாக்குமூலம் IBC Tamil