படுக்கையறையில் நாக சைதன்யாவின் முதல் மனைவி பற்றி பேசிய நடிகை சமந்தா

Samantha Tamil Cinema Naga Chaitanya
By Thahir 1 வாரம் முன்

நடிகர் நாக சைதன்யா தனது பிறந்த நாளை நேற்று கொண்டாடிய நிலையில் அவர் முன்னாள் மனைவி குறித்து பேசிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாக சைதன்யாவை பிரிந்த சமந்தா

கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சமந்தா. திருமணத்திற்கு பிறகு சமந்தா திரைப்படங்களிலும், வெப் தொடர்களிலும் நடித்து வந்தார்.

Actress Samantha talks about Naga Chaitanya

இந்த நிலையில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இருவரும் பிரிந்தனர். இது குறித்து நாக சைதன்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட ஆலோசனைக்கு பிறகு கணவன் மனைவியாக உள்ள நானும் சமந்தாவும் பிரிந்து தனித்து செல்வதற்கு முடிவு செய்துள்ளோம்.

பத்து வருடங்களுக்கு மேலாக நண்பர்களாக இருப்பதற்கு எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த கடினமான நேரத்தில் நண்பர்கள், நலம் விரும்பிகள், ஊடகங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் குறிப்பிட்டிருந்தார். அதற்கு ரசிகர்கள் பலர் தங்களளது மன வேதனையை வெளிப்படுத்தியிருந்தனர்.

படுகையறையில் கேள்வி கேட்ட சமந்தா 

இந்த நிலையில் நேற்று நாக சைதன்யா தனது பிறந்த நாளை கொண்டாடினார். நாக சைதன்யா குறித்து சமந்தா பேட்டி ஒன்றில் பேசிய வீடியோ காட்சி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

Actress Samantha talks about Naga Chaitanya

அதில் நாக சைதன்யாவின் முதல் மனைவி குறித்து சமந்தா பேசியுள்ளார். அந்த பேட்டியில் செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்து பேசிய சமந்தா, தன்னுடைய படுக்கையறையில் நாக சைத்தன்யாவின் முதல் மனைவி தலையணை தான் என்று குறிப்பிட்டிருந்தார்.

தான் நாக சைத்தன்யாவை கிஸ் செய்வதென்றாலும் தங்களுக்கு இடையில் தலையணை இருக்கும் என்றும் சமந்தா தெரிவித்திருந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.