இனி இப்படித்தான்.. படங்களில் கஷ்டம் - சமந்தா அதிரடி முடிவு!

Samantha Tamil Cinema Indian Actress
By Sumathi Aug 24, 2025 04:21 PM GMT
Report

இனி அதிக படங்களில் நடிக்க மாட்டேன் என நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

நடிகை சமந்தா

‘பாணா காத்தாடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் சமந்தா. அதன் பிறகு தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். அண்மையில் அவருக்கு மயோசிடிஸ் நோய் இருப்பது கண்டறியப்பட்டது.

samantha

இதையடுத்து அதற்கான சிகிச்சையில் இருப்பதால் படங்களில் நடிப்பதை குறைத்துவிட்டார். கடைசியாக 2023-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘குஷி’ படத்தில் நடித்திருந்தார்.

இந்த ஆண்டு தெலுங்கில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘சுபம்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் சமந்தா நடித்திருந்தார். இந்நிலையில் அவர் அளித்த சமீபத்திய பேட்டியில், “சினிமா மற்றும் உடற்பயிற்சி இரண்டிலும் எனக்கு மிகவும் பிடித்த, உற்சாகம் தரக்கூடியதை மட்டுமே செய்வேன் என்ற புள்ளிக்கு நகர்ந்துவிட்டேன்.

எனக்கு அந்த கெட்ட பழக்கம் இருக்கு - தனுஷ் பட நடிகை ஓபன்டாக்!

எனக்கு அந்த கெட்ட பழக்கம் இருக்கு - தனுஷ் பட நடிகை ஓபன்டாக்!

சினிமா பயணம்

கடந்த காலங்களில் நான் பல படங்களில் நடித்துள்ளேன். ஆனால், உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அதில் சில படங்கள் எனக்கு திருப்தி அளிக்கவில்லை. இருப்பினும் நான் நடித்தேன். இனிமேல் ஒரு நாளைக்கு 5 படங்களுக்கான படப்பிடிப்பில் கலந்துகொள்ள மாட்டேன்.

இனி இப்படித்தான்.. படங்களில் கஷ்டம் - சமந்தா அதிரடி முடிவு! | Samantha Talks About Her Acting Career

என் உடல் சொல்வதை கேட்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். இதனால் என்னுடைய வேலைகளை குறைத்துவிட்டேன். இனி நான் செய்யும் வேலைகளில் முழு ஈடுபாட்டுடன் செய்ய முடிவெடுத்துள்ளேன்.

இதன்மூலம், படங்களின் எண்ணிக்கை குறையலாமே தவிர, அதன் குவாலிட்டி குறையாது. மிகவும் நேர்த்தியுடன் படங்களை தேர்வு செய்வேன்” என்று தெரிவித்துள்ளார்.