தோல் நோயால் அவதிப்பட்ட சமந்தா - நாடு திரும்புவது எப்போது?
தோல் நோயால் சிகிச்சைக்கு சென்ற நடிகை சமந்தா தற்போது சிகிச்சை முடிந்த நிலையில் ஒரிரு நாட்களில் இந்தியா திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா திரும்பும் சமந்தா
தமிழ், தெலுங்கு உட்பட பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான சூர்யா, விஜய், உள்ளிட்டோருடன் நடித்துள்ளார்.
கடந்த ஆண்டு வெளியான புஷ்பா படத்தின் பாடல் ஒன்றில் நடனம் ஆடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இவர் அண்மையில் பாலிமார்பஸ் லைட் எரப்ஷன் என்ற தோல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தார்.
தற்போது அமெரிக்காவில் சிகிச்சை நிறைவு பெற்றதால் அவர் ஓரிரு நாளில் இந்தியா திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக தோல் நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக சமந்தா அமெரிக்கா சென்றதால் மணிரத்னம் இயக்கிய கடல் மற்றும் சங்கரின் ஐ திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை இழந்தார்.