சமந்தாவுக்கு 2-வது திருமணமா..? : வெளியான பரபரப்பு தகவல்
நடிகை சமந்தா இரண்டாவது திருமணம் செய்துகொள்ள தயாராகி வருவதாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
சமந்தா திருமணம்
தமிழில் வெளியான மாஸ்கோவின் காவேரி திரைப்படம் மூலமாக அறிமுகமான சமந்தா ,கவுதம் மேனன் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு பதிப்பில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.
இப்படத்தின் மூலம் தான் நாக சைதன்யாவுடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது.இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. பின்னர் சில ஆண்டுகள் காதலித்து வந்த இவர்கள், கடந்த 2017-ம் ஆண்டு கோவாவில் திருமணம் செய்துகொண்டனர்.
பிரிந்த சினிமா ஜோடிகள்
ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை நான்கே ஆண்டுகளில் பிரிந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர். அவர்களின் இந்த திடீர் முடிவு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மீண்டும் திருமணம்
இந்த நிலையில், தற்போது நடிகை சமந்தா இரண்டாவது திருமணம் செய்துகொள்ள தயாராகி வருவதாக தகவல் ஒன்று டோலிவுட் வட்டாரத்தில் பரவி வருகிறது. அவர் பாலிவுட்டை சேர்ந்த நடிகரை காதலிப்பதாகவும், விரைவில் அவரை 2-வது திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் சமந்தா தரப்பினர் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.