அது ஏன்? பெண்களிடம் மட்டும் ஒழுக்க கேள்வி கேக்குறீங்க? - நடிகை சமந்தா கேள்வி
கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக உள்ளது , சமந்தா, நாக சைத்தன்யாவின் விவாகரத்து விவகாரமே டோலிவுட்டின் சிறந்த காதல் ஜோடிகளுக்கு என்னதான் ஆச்சு ? ஏன் இப்படி திடீரென முடிவெடுத்துட்டாங்க என இருவரின் ரசிகர்களும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
குறிப்பாக நடிகை சம்ந்தாவினை அதிகமாக டேக் செய்து இணையவாசிகள், கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் நாக சைதன்யாவைப் பிரிந்ததாக அறிவித்த சமந்தா, நேற்று பதித்த அவரது இன்ஸ்டகிராம் போஸ்ட்டில் பழைய காதல், பழைய பாடல்கள் இவையெல்லாம் என வெள்ளை உடையுடன் ஒரு படத்தைப் பகிர்ந்து பதிவிட்டிருந்தார்.
இன்று காலை அவர் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் போஸ்ட் செய்துள்ள ஒரு பதிவில் “பெண்களை மட்டும் ஒழுக்கம் சார்ந்த கேள்விகளுக்கு உட்படுத்தி, ஆண்களிடம் ஒழுக்கம் சார்ந்த கேள்விகளை வைக்கவில்லையென்றால், இந்த சமூகமே ஒழுக்கக்கேடானது என்றுதான் புரிந்துகொள்ள வேண்டியதாக இருக்கிறது” என்று பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில், ஜூனியர் என்டிஆர் தொகுத்து வழங்கும் எவரு மிலோ கோடிஸ்வரலு (குரோர்பதி - தெலுங்கு அத்தியாயம்) என்ற சின்னத்திரை நிகழ்ச்சியில் நடிகை சமந்தா கலந்து கொள்கிறார்.
விவாகரத்து அறிவிப்புக்குப் பிறகு நடிகை சமந்தா முகம் காட்டும் நிகழ்ச்சி என்பதால் ரசிகர்களிடையே இந்நிகழ்ச்சி கடும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.