ஸ்பை செய்யாததால்தான் என் வாழ்க்கை இப்படி ஆகி விட்டது - மனம் திறந்த சமந்தா
நடிகை சமந்தா தனது நிஜ வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
சமந்தா
நடிகை சமந்தா "Citadel: Honey Bunny" என்ற வெப் சீரிஸில் நடித்து உள்ளார். இந்த வெப் சீரிஸ் நவம்பர் 7 ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
இந்த வெப் சீரிஸில் சமந்தா ரகசிய புலனாய்வாளராக நடித்துள்ளார். தற்போது வெப் சீரிஸின் ப்ரோமோஷன் வேலைகளில் நடிகை சமந்தா இறங்கியுள்ளார்.
நிஜ வாழ்க்கையில் ஸ்பை
இதற்காக சமந்தா அளித்துள்ள நேர்காணலில், "இந்த சீரிஸில் நீங்கள் ஸ்பை ஏஜெண்டாக நடித்தீர்களே, நிஜ வாழ்க்கையில் கூட ஸ்பையாக செயல்பட்டீர்களா?" என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு "நிஜ வாழ்க்கையில் நான் அப்படி செயல்பட வேண்டியிருந்தது. அப்படி செய்யாமல் இருந்தது மிகவும் தவறு. ஸ்பை ஆகாததால்தான் என் வாழ்க்கை இப்படி ஆனது" என பதிலளித்தார்.
சமந்தாவிடமிருந்து விவாகரத்து பெற்ற நாக சைதன்யா, தற்போது பிரபல நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்ய உள்ளார். இவர்கள் குறித்துதான் சமந்தா இவ்வாறு கூறினாரா என ரசிகர்கள் விவாதம் செய்து வருகின்றனர்.